மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 24 மார்ச், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் - பகுதி 5

                                                                                       து.சுந்தரம், கோவை


         இதுவரை எழுத்துகள் முழுமையும் பார்த்தோம். இனி, நேரடியாகக் கல்வெட்டுகளின் மூலவடிவத்தில் எழுத்துகளை இனம் கண்டு, படிக்கும் பயிற்சி தொடங்குகிறது. முன்பே குறிப்பிட்டவாறு, பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என மூவகை வடிவங்களைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். தமிழ் எழுத்துகளைப் பொதுமைப்படுத்தி, முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 985) எழுத்து வடிவங்களையே நாம் பயின்றோம். இக்கால எழுத்துகள் திருத்தமான வடிவும் அழகும் அமையப்பெற்றவை.  இவற்றை மையமாகக் கொண்டு பயின்றால், இதன் காலத்துக்கு முன்பு, பின்பு என எழுத்துகளின் வடிவ மாறுபாட்டைக் கண்டுணர்ந்து  பயிற்சி பெறுதல் எளிது. எனவே, தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டு எழுத்துகளில் நம் பயிற்சி தொடங்குகிறது.






எழுத்துகளைப் படித்துத் தனியே எழுதிவைத்துக்கொண்டு, கீழே தரப்பட்ட கல்வெட்டின் பாடத்தோடு உங்கள் பயிற்சியை ஒப்பிடுக.

கல்வெட்டின்  பாடம்
----------------------------

த்து ஏழு கழஞ்சேய் முக்காலே நாலு ம
த்து எண் கழஞ்சு-ஒற்றை கங்கி(ல்)
பள்ளித்தொங்கல் மகுடங்கள் திருப்ப
ழஞ்சேய் முக்காலே யிரண்டு மஞ்சாடி
சேய் முக்கால் திருப்பள்ளித்தொ
(தி)ன் கழஞ்சாக இரண்டினால் பொன்
பத்து ஒன்பதின் கழஞ்சே ஏழு ம(ஞ்)
ண்டு மஞ்சாடியுங் குன்றி - திருப்ப(ள்)


எழுத்துகளில் கவனிக்கவேண்டியவை
------------------------------------------------------

1. எகரம், ஏகாரம் இரு எழுத்துகளும் ஒன்றே.
2. ”ழு”, “மு”  இரு எழுத்துகளும் ஒன்றே.
3. “னா” எழுத்தின் பழைய வடிவம்.
4. “பொ” எழுத்தில் பின்னொட்டுக் குறியீடு “ப” எழுத்தை அடுத்து எழுதப்படாமல்
   “ப” எழுத்தோடு ஒட்டியுள்ளது.
5. இரண்டாவது வரியில் “ஒற்றை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு. 

இன்னுமொரு கல்வெட்டு.






கல்வெட்டின் பாடம்
-----------------------------

முதல் வரியில் கிரந்த எழுத்துகள் உள்ளன. எனவே பாடம் தரவில்லை.

இருபத்தாறாவது நாள் நூற்று
மேற்படி கல்லால் நிறை
ழஞ்சு -  நாளதினாலேய் கு
டுத்த பொன்னின் கலச
பொன்னின் தட்டம் ஒன்
ல்  நிறை ஐய்ம்பதின் க

கவனிக்கவேண்டியன
------------------------------

1. “றா”  எழுத்தின் பழைய வடிவம்
2. “ஞ்” எழுத்து முந்தைய கல்வெட்டில் உள்ள “ஞ்” எழுத்திலிருந்து
    மாறுபட்டுள்ளது.
3. இறுதி வரியில் உள்ள “நிறை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு 
   முந்தைய கல்வெட்டில் உள்ள குறியீட்டிலிருந்து மாறுபட்டுள்ளது.






-------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.

புதன், 11 மார்ச், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 4
                            து.சுந்தரம், கோவை. அலைபேசி : 9444939156


         முதல் “ற  வரையிலான இறுதி உயிர்மெய் எழுத்துகள் இப்பகுதியில்   தரப்பட்டுள்ளன. ஐகாரத்தைக் குறிக்கப்பயன்படும் முன்னொட்டு இரு வடிவங்களில் கல்வெட்டுகளில் பயில்கிறது. அதேபோல், னா, ணா, றா ஆகியவை பழைய வடிவில் அமைந்திருக்கும். விளக்கம் கீழ் வருமாறு:







வெள்ளி, 6 மார்ச், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 3
                            து.சுந்தரம், கோவை. அலைபேசி : 9444939156


         உயிர்மெய் எழுத்துகளில் “த” எழுத்தின் இறுதிப்பகுதியையும் ”ந”, “ப”, “ம”, ”ய”, “ர” ஆகிய எழுத்துகளின் வடிவங்களையும் இப்பகுதியில் காணலாம். பாடம் தொடர்கிறது.