கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 11
சென்ற வகுப்பில், சோழப்பேரரசுக்கு
அடித்தளமிட்ட விசயாலயனின் மகனான முதலாம் ஆதித்தனின் தக்கோலத்துக் கல்வெட்டைப்
(கி.பி.895) பார்த்தோம். இங்கு, ஆதித்தனின் மகனான முதலாம்
பராந்தகனின் இரு கல்வெட்டுகளைப் பார்ப்போம். பராந்தகனின் காலம் கி.பி. 907-955.
இரு கல்வெட்டுகளுமே திருநாவலூர் கல்வெட்டுகள். முதல் கல்வெட்டின்
பார்வைப்படியின் படம் கீழே:
இப்பொழுது கல்வெட்டின் பாடத்தையும்
எழுத்துகளின் வடிவ மாறுபாடுகளையும் பார்ப்போம்.
கல்வெட்டின் பாடம்
ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்
ட கோப்பரகேசரி பன்மற்கு
யாண்(டு..) ஆவது திருநாவ
லூர் வியாபாரி முருகன் விச்சி
யன் அட்டுவித்த கூத்தப்
பெருமாளுக்கு வைத்த விளக்கு
ஒன்றிற்
க்கு வைத்த ஆடு தொண்ணூ(று)
இவை
(பன்) மாஹேச்0வரர் (ர) க்ஷை
இரண்டாம் கல்வெட்டின் பார்வைப்படியின்
படம் கீழே :
இப்பொழுது கல்வெட்டின் பாடத்தையும்
எழுத்துகளின் வடிவ மாறுபாடுகளையும் பார்ப்போம்.
கல்வெட்டின் பாடம்
ஸ்வஸ்தி(ஸ்ரீ) ... மதிரைகொண்ட
கோப்பரகேசரி பன்ம(ர்)க்கி(யா)
ண்டு ... ஆவது திருநாவ
லூர் திருக்கொண்டீச்0வர ..
ம் மாகிய ராஜாதித்த கு(..) ர
க
த்துக்கு ராஜாதித்த மலையா......
ன் பரிவாரத்து சேவகன் ஒருக்கு
................ழ சேந்தகுமரன்
வைத்த நொந்தா விளக்கு ஒன்று
க்கு வைத்த ஆடு நூறு சாவா
மூவாப்பேர்ராடு இவை ப
ன்மாஹேச்0வரர் ரக்ஷை
து.சுந்தரம், கல்வெட்டு
ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக