மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 6 மார்ச், 2016

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் 16


கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

கல்வெட்டு 1



கல்வெட்டின் பாடம் :

  1. ம் குமுதகத்திலும் வெட்டிக்கிடந்த
  2. ட்டிஎடுத்து சுந்தரபாண்டிய தே
  3. த படியே ஆற்றூருடையான்
  4. ழதேவற்கு யாண்டு 35 வது கெ
  5. றம் உடைய நாயனார் கோயிலில்
  6. ல் நாள் ஒன்றுக்கு சந்தி ஒன்றுக்
  7. நாழியும் ஆக நாள் ஒன்றுக்கு அரிசி
  8. க்கும் நெல்லு குறுணி ஒரு நாழியு


குறிப்புகள்: 
குமுதகம் கோயில் விமானத்தின் அடித்தளப்பகுதியில் ஒன்று. குமுதம்
            என்பது பொதுவாக வழங்கும் பெயர்.
சந்தி -  பூசை வேளை
நாழி =  1 படி
குறுணி = 8 நாழி

கல்வெட்டு 2



கல்வெட்டின் பாடம் :

  1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜே
  2. ந்த்ர தேவற்கு யாண்டு
  3. பத்தாவது கோடி
  4. க்காரைத்தொழிலிர
  5. ருக்கும் பெ(ரு)மாள் உ
  6. ரிமையா(ரி)ல் இராச
  7. சிசிறியானேந் இட்
  8. (திரு) வாயல் முகவணை
  9. (உத்திரம்) உள்பட இந்நிலை
  10. கால் இட்டேந் இராசசிறி
  11. யானேந்

குறிப்புகள் :
பெருமாள் அரசன்
உரிமையார் அரசனுக்கு உரிமையானவர் (இங்கே படை வீரர்கள்
              ஆகலாம்).
திருவாயல்(திருவாயில்), முகவணை, உத்திரம், நிலைக்கால் கட்டிட
                        உறுப்புகள்.

கல்வெட்டு 3



கல்வெட்டின் பாடம் :

1.       ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜேந்திர தேவ
2.       ற்கு யாண்டு பதிநஞ்சாவது எதிர் எதிர்
3.       ரைவழினாட்டுக் கோடிக்காரைத்
4.       (தொ)ழு முதலிகளில் சோழன் கூத்தனான
5.       ராசேந்திர இருங்கோளனேன் பெருமா
6.       டுகக்கொத்துக்கு நாயக்கமாரில் தொ


குறிப்பு :
கரைவழி நாட்டுக் கோடிகாரைத்தொழு என்னும் ஊர் குறிப்பிடப்படுகிறது.
முதலி தலைவன்; அரச அதிகாரி.
கொத்து வேலையாள் அல்லது ஊழியர் தொகுதி. இங்கே குரிப்பிடப்
          படுவது பெருமாள் வடுகக் கொத்து என்பவர்.
          (பெருமாள் அரசன்)


குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


--------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக