மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 2 ஜூன், 2018


தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள்-4


தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில், தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தன. கல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும், தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தன. கல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும். ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:

குறிப்பு:  அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படாவிட்டாலும், கல்வெட்டில் உள்ளவையே. பொருள் எளிதில் விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.




கல்வெட்டுப்பாடம்

1 ண்ணூற்று முக்கலனே இருதூணிக்குறுணி ஐஞ்ஞாழி இந்நாட்டு நகரம் தி
2 கைக்கீழ் இரண்டு மாவிலும் இவ்வூர் ஊர்நத்தமுங் குளங்களும் புல
3 ரைக்காணிக்கீழ் முக்காலேஅரைமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்கு
4 காலே மூன்று மாவினால் இறைகட்டின பொன் இருநூற்றுத்தொண்
5 நாட்டுத்திருநறையூர் நாட்டு அரக்கன்குடி அளந்தபடிநிலம் ஏழே
6 நத்தமுங் குளங்களாலும் இறையிலி நிலம் எட்டுமாக் காணிக்கீழ்
7 முக்காணிக்கீழ் முக்காலே ஒருமாவினால் இறைகட்டின காணி
8 ஐம்பத்து அறுகலனே ஏழு குறுணி முந்நாழி||- இந்நாட்
9 அரையே இரண்டுமாவிலும் இவ்வூர் ஊர்நத்தமுங் குளங்களு

விளக்கம்: பெரிய கோயிலுக்கு அளித்த நிலக்கொடை பற்றிக் கூறும் கல்வெட்டு. மா, காணி, முந்திரிகை ஆகியன நில அளவுகள்.  கலன் (கலம்), குறுணி, நாழி ஆகியவை நெல் அளக்கும் முகத்தல் அளவைப் பெயர்கள். நாழி என்பது படி. எட்டுப் நாழி ஒரு குறுணி. பன்னிரண்டு குறுணி ஒரு கலம். ஊர் நத்தம் என்பது ஊரில், குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலம். கொடை நிலம், இறையிலி நிலமாகக் கோயிலுக்கு அளிக்கப்படுகிறது. அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியை (இறையை) நீக்கி நிலமளிக்கப்படுகிறது. கொடை நிலம், நறையூர் நாட்டு அரக்கன்குடியைச் சேர்ந்தது. கொடை நிலத்துள் அமையும் ஊர் நத்தமும், குளங்களும் கொடையில் அடக்கம்.





துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக