மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 1 ஜனவரி, 2016



                                   கல்வெட்டு எழுத்துகள் கற்போம் - 12


         சற்றே கால இடைவெளிவிட்டு  மீண்டும் கல்வெட்டு எழுத்துகள் கற்போம்
பாடம் தொடர்கிறது. இராசராசனின் தஞ்சைக்கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை அடிப்படையாக வைத்தே நாம் எழுத்துகளைக் கற்றோம். அவனுடைய காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளைப்
பார்த்துக்கொண்டிருந்தோம். முதலாம் பராந்தகனின் இரு கல்வெட்டுகளைச்
சென்ற வகுப்பில் பார்த்தோம். (காலம் கி.பி. 907-955). இப்போது  உத்தம சோழனின் காலத்துக் கல்வெட்டு ஒன்றையும் (கி.பி. 976 ) மற்றும் அதே காலத்தை ஒட்டிய 10-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றையும் பார்ப்போம்.

1             மயிலாடுதுறை வட்டம்-திருவேள்விக்குடி மணவாளேசுவரர் கோயில்
               கல்வெட்டு.   அரசன் :உத்தம சோழன்.  காலம் : கி.பி. 976.


கல்வெட்டின் பாடம் :

ஸ்வஸ்திஸ்ரீ  யாண்டு ஆறாவது திருவே
ழ்விக்குடி ஆழ்வார்க்கு உடையபிராட்
டியார் பிராந்தகன் மாதேவடிகளாரா
ன செம்பியந் மஹாதேவியார் குடு(த்)
த வெள்ளிக்கலைசம் ஒந்று இது நி
றை நூற்று நாற்ப்பத்து ஒரு கழை(ஞ்) 
சு இது பந்மாஹேச்வரர் ர(க்‌ஷை)

குறிப்புகள் :
 வரி 1   ஸ்வஸ்திஸ்ரீ -  கிரந்தம்
வரி  3   தே -  கிரந்தம்
வரி 4   மஹாதே  -  கிரந்தம்
வரி 7  மாஹேச்வரர் ர -  கிரந்தம்

2           தஞ்சை வட்டம் கருந்திட்டைக்குடி வசிஷ்டேஸ்வரர் கோயில்
             கல்வெட்டு. காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு.



கல்வெட்டின் பாடம் :

ஸ்வஸ்திஸ்ரீ  இப்படைஇ
ல் இருபத்து இ
ரண்டு கல்லுகி(ழ)
(வந்) ஆனை காவன் தா
யார்ருக்கும் த(ன)
க்கும் இருபத்
தொன்று காசுபெற்றி

குறிப்பு :
வரி 1   ஸ்வஸ்திஸ்ரீ - கிரந்தம்


து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக